1)மிருகம்
மனவெளி பறவையாய்
என்னை சபித்து கொண்டேன்
பெளர்ணமி இரவு வெளிச்சத்தில்
ஆற்றின் நடுவில் குதித்து குளிக்க ஆசைபட்டேன்
அசட்டுதனங்களால் என்னை உருவகித்தேன்
புன்னகையின் வைரமாய் என்னை ஆட்கொண்டேன்
பூமி எங்கும் மனவெளி பறவையாய்
பறக்க முயன்று முயன்று கடைசியில்
தோற்றுபோய்
நாக்கின் வெக்கைக்கு நடுவே
நின்று மீண்டும்
தோற்கிறேன்
2)ஆகசோதி
மரணித்த பொழுதுகளில் வாழ்வின்பிரகாசம் பெரு வெளிச்சமாக தெரியும்
நம்மை சுற்றி நாலுபேர் குளிர்காய்வார்கள்
நாமும் படுத்திருப்போம்
நான்குஅடி சாஸ்திர பெட்டிக்குள்
3)வளர்ச்சி
பூமி பரிணாம வளர்ச்சியில் இருந்தபோது
என் வாலில் கட்டி பால்வெளி எங்கும் வலம்வந்தேன்
பாரம் தாங்காமல் பூமி
வாலில் இருந்து
உருண்டு
உருண்டு
பந்தானது
−ஆர்.நவின் குமார்
10/10/2021
🖤🔥
ReplyDelete🔥♥️
ReplyDeleteபடைப்பில் அழகியல் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் ஆழ் மென் சோகம் பட்டும் படராத இருள் இனி இப்படைப்பை பற்றி கூற நான் வார்த்தைகள் புதிதாய் தேடவேண்டும் என் நண்பா
ReplyDelete