Skip to main content

சில கவிதைகள்.....



1)மிருகம்

மனவெளி பறவையாய்
என்னை சபித்து கொண்டேன்
பெளர்ணமி இரவு வெளிச்சத்தில்
ஆற்றின் நடுவில் குதித்து குளிக்க ஆசைபட்டேன்
அசட்டுதனங்களால் என்னை உருவகித்தேன்
புன்னகையின் வைரமாய் என்னை ஆட்கொண்டேன்
பூமி எங்கும் மனவெளி பறவையாய்
பறக்க முயன்று முயன்று கடைசியில்
தோற்றுபோய்
நாக்கின் வெக்கைக்கு நடுவே
நின்று  மீண்டும்
தோற்கிறேன்

2)ஆகசோதி

மரணித்த பொழுதுகளில்  வாழ்வின்பிரகாசம் பெரு வெளிச்சமாக தெரியும்
நம்மை சுற்றி நாலுபேர் குளிர்காய்வார்கள்
நாமும் படுத்திருப்போம்
நான்குஅடி சாஸ்திர பெட்டிக்குள்


3)வளர்ச்சி

பூமி  பரிணாம வளர்ச்சியில் இருந்தபோது
என் வாலில் கட்டி  பால்வெளி எங்கும் வலம்வந்தேன்
பாரம் தாங்காமல் பூமி
வாலில் இருந்து
உருண்டு
உருண்டு
பந்தானது





       −ஆர்.நவின் குமார்
         10/10/2021

Comments

  1. படைப்பில் அழகியல் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் ஆழ் மென் சோகம் பட்டும் படராத இருள் இனி இப்படைப்பை பற்றி கூற நான் வார்த்தைகள் புதிதாய் தேடவேண்டும் என் நண்பா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மறத்தல்

மறத்தல் மது குடித்தால் மனம் பொறுத்துகொள்ளும்  என எண்ணி டாஸ்மாக் சென்று மது அருந்தினேன் மெருகு ஏறிய மனம் எண்ணத்தில்   ஒரு மாய பறவையை வரைந்து துரோங்களை இறக்கையிலும் தன்னுடலில் என்னை பொருத்தி கொண்டு நிழலை விட்டு  பறந்தது ஆர்.நவின் குமார் 11-03-2022

இறுதி விடுதலை - குறுங்கதை

இறுதி விடுதலை - நவின் ஆர் குமார்  பக்கத்து படுகையில் இருந்த  நோயாளியின் உடல் அலைகள் போல் மேலெழுந்து சாந்தமானது. சின்ன பையன் தற்கொலைக்கு முயற்சி செய்து பக்கத்தில் படுக்கையில் கிடந்தான். அவனை இறப்பு அணைக்க தொடங்கியதும் எனக்கு பயம் தீயன அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு வேளை அவன் தற்கொலையில் வெற்றி அடைந்து இருந்தால் என் பக்கத்தில் இருந்து இருக்க மாட்டான். நானும் அவனை போல் அடி அடியாக தற்கொலைக்கு முயன்று . தற்போது அவன் பக்கத்தில் படுத்துள்ளேன். பிறந்ததிலிருந்தே பெயர் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். நானும் அவனும் சதுரங்க போட்டியில் தோல்வியுற்று வலியில் துடித்துக் கொண்டு இருக்கிறோம் என புரிந்தது. பெயர் தெரியாத நோய்மையின் தாக்கம் தாங்க முடியாமல் நானும் தற்கொலை முயற்சி செய்து தோற்று போய் உள்ளேன். அவனும் அப்படி தான் தனது தீராத காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று தோற்றுள்ளான். இறப்பின் வெற்றி புள்ளியின் மையத்திற்கு அருகில் சென்று தோல்வியடைந்துள்ளோம். இன்ப துன்ப பாகுபாடுயின்றி வெற்றியின் இலக்கை நோக்கிய மனித ஆத்மா பயணம் தொடர்கிறது. நானும், என் உற்ற பக்கத்து படுக்கை நண்பனும் தற்கொலையின...