Skip to main content

இறுதி விடுதலை - குறுங்கதை

இறுதி விடுதலை
- நவின் ஆர் குமார்
 பக்கத்து படுகையில் இருந்த  நோயாளியின் உடல் அலைகள் போல் மேலெழுந்து சாந்தமானது. சின்ன பையன் தற்கொலைக்கு முயற்சி செய்து பக்கத்தில் படுக்கையில் கிடந்தான். அவனை இறப்பு அணைக்க தொடங்கியதும் எனக்கு பயம் தீயன அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு வேளை அவன் தற்கொலையில் வெற்றி அடைந்து இருந்தால் என் பக்கத்தில் இருந்து இருக்க மாட்டான்.
நானும் அவனை போல் அடி அடியாக தற்கொலைக்கு முயன்று . தற்போது அவன் பக்கத்தில் படுத்துள்ளேன். பிறந்ததிலிருந்தே பெயர் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். நானும் அவனும் சதுரங்க போட்டியில் தோல்வியுற்று வலியில் துடித்துக் கொண்டு இருக்கிறோம் என புரிந்தது.
பெயர் தெரியாத நோய்மையின் தாக்கம் தாங்க முடியாமல் நானும் தற்கொலை முயற்சி செய்து தோற்று போய் உள்ளேன். அவனும் அப்படி தான் தனது தீராத காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று தோற்றுள்ளான். இறப்பின் வெற்றி புள்ளியின் மையத்திற்கு அருகில் சென்று தோல்வியடைந்துள்ளோம். இன்ப துன்ப பாகுபாடுயின்றி வெற்றியின் இலக்கை நோக்கிய மனித ஆத்மா பயணம் தொடர்கிறது. நானும், என் உற்ற பக்கத்து படுக்கை நண்பனும் தற்கொலையின் வெற்றியை அடைய முடியாமல் வாயில் நூரை தள்ளியவாரு இறப்பை வென்றுவிட வேண்டும் என்ற பயணத்தில் அவன்  உள்ளான். எனக்கு முன் சென்று வென்றுவிடுவான் என நினைக்கிறேன்.
இரவு நேர மருத்துவர் வந்து என் பக்கத்தில் உள்ள நண்பனை சோதித்து  , அவனது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து வருவதாகவும். அவன் இறப்பின் வெற்றி புள்ளியை தோட சில மணி நேரங்கள் உள்ளதாக கூறினார்.

பக்கத்து படுக்கை நண்பனை எனக்கு மிகவும் பிடித்தது போனது. இரவில் அவன் கண்கள் என்னை பார்த்த வாரே இருந்தன. நண்பா என அழைத்தேன். கண்ணில் நீர் வழிந்தது. ஒரே வெற்றியை அடைய விரும்பும் போட்டியாளர்களின் மொழி எனக்கு புரிந்தது. சிரித்து கொண்டேன்.
எனது வாழ்வின் இறுதிநாட்களை நான் எண்ணி கொண்டு இருக்கிறேன். அவனோ வாழ்வின் இறுதி நிமிடங்களை எண்ணி கொண்டு இருக்கிறான். இரவு நேரம் அறை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. அழகிய செவிலியர் இருவரும் அவர்கள் அறையில் ஒய்வெடுத்து கொண்டு இருந்தனர். சக போட்டியாளர் நண்பனுக்கு கடிதம் எழுதி. அவன் பக்கத்தில் சென்று வாசிக்க தொடங்கினேன்.
அன்பு நண்பா!
உன் வாழ்வின் இறுதி ஆட்டத்தில் உள்ளாய். நீ எதுக்காக இந்த முடிவை எடுத்தாய்யோ அதன் பலனை அடைய போகிறாய். நீ வாழ்ந்திருந்தால் தீரா வலியுடன் தான் இருந்து இருப்பாய். உன் மரணம் முழுமை அடையும். நான் பெயர் தெரியாத நோயில் இருந்து தப்பிக்க தற்கொலை முயன்று வலியில் இருக்கிறேன். நீ எனக்கு முன் சென்று வழிகாட்ட வேண்டும் நண்பா. நீ எடுத்த முடிவை சிலர் முட்டாள் என கருதுவார்கள். காதல் தோல்விக்கு தற்கொலை ஓர் காரணமா என நினைப்பார்கள். உன் வாழ்வன் முடிவை நீயே தேர்வு செய்தாய். அதில் வெற்றியும் அடையே போகிறாய் . சதுரங்கம் போல் ஒரே வெட்டில் வெற்றி பெற்று விட்டாய்.நான் பரமபதம் போல் கீழே விழுந்து மேழே எழுகிறேன்.
இந்த இரவின் நிழலில் உன் பக்கத்தில் அமர்ந்து சக போட்டியாளைனாய் உன்னை தேர்வு செய்து. பொறாமை இன்றி உன் வாழ்வின் லட்சியத்தை அடைய வாழ்த்துகிறேன். முடிவு தவறாக இருத்த போதும் உன்னை நீ சுகந்திர படுத்தி கொள்ள தற்கொலையை தேர்தெடுத்து அதில் வெற்றியும் அடைய போகிறாய்.
பக்கத்தில் இருக்கும் வெண்டிலெட்டர் உன் இறப்பை தீர்மானிக்கும். பரமபதம்தான் என் வாழ்வு பெயர் தெரியாத நோய் மையால் நான் அவஸ்தைபட்டு வருகிறேன்.
நீயும் இப்படி தான் ஒவ்வொரு உறுப்பாய் செயல் இழந்து கொண்டு உள்ளது. உன் வெற்றி புள்ளியை அடைய சில நிமிடங்களே உள்ளன. உன் சுகந்திர விடுதலையை கொண்டாடுவோம்.
உன் கடைசி நிமிடங்களில்

"வலிகளின் வீரியம் குறைய
உயிர் துடிப்புகள் வெகம் அதிகரிக்கும்"
உன் உடல் ஐந்து முறை அலையென மெலெழுந்து அடங்கியதும். உனது இறுதி நிமிடங்களை அறிவித்துவிட்டார்கள்.
இக் கடிதத்தை வாசித்த உடன் அவன் கன்னத்தில் முத்தமிட்டேன்.


அவனது இறுதி நிமிடங்களை அடைய தொடங்கினான். சூரியன் உதிக்கும் நேரம். பறவை எல்லாம் கூட்டில் இருந்து இரை தேடி பறக்க தொடங்கியது. நண்பனும் பெருமுச்சைவிட்டு தன் இறுதி விடுதலையை அறிவித்தான்
ஓய்வெடுத்த செவிலியர்கள் அனைத்து லைட்டை போட்டார்கள். காலை நேர மருத்துவர் வந்து அவன் விடுதலையை அறிவித்தார்.

Comments

Popular posts from this blog

கிருமி கதைகள் வாசிப்பு அனுபவம்

கிருமி கதைகள் மொழிபெயர்ப்பு : நரேன் கொரோனா பெரும் தொற்று நமக்கு பல பாடங்களை கற்றுத்தந்தது தனிமனித இடைவெளி தொடங்கி சுய  ஒழுக்கம் வரை. மொத்தம் பத்து கதைகள் இந்த புத்தகத்தில்   ஒவ்வொரு கதையும் நம்முள் பல கேள்விகளையும் பதில்களையும் விட்டு செல்கின்றன பெருந்தொற்று, நோய்தொற்று காலங்களையுடன் சேர்த்து அறிவியில் புனைவுகளுடன் கலத்த யதர்த்தம், த்ரில்லர்களையும் இக்கதைகள் கூறுகின்றன. நோய் மீதான மனிதனின் பயமும் அதனால் தன்னை தற்காத்துகொள்ள மேற்கொள்ளும் செயல்கள் அகத்தாலும் புறத்தாலும் அவன் கண்டடையும் சித்திரங்களை இந்த கதைகள் கூறுகின்றன. மேலும் சில கதைகள் நோய் தொற்று கலந்த   அரசியல் நுண்ணறிவையும் கூறுகின்றன. எழுத்தாளர் நரேனின் மொழிபெயர்பு வாசிக்க தடையின்றி உள்ளது. பல அறிவியல் புனைவு எழுத்தாளர்களையும் ,ஆங்கில த்ரில்லர் எழுத்தாளர்களை தமிழில் அறிமுகம் செய்துள்ளார் மொழிபெயர்பாளர் நரேனுக்கு வாழ்த்துகளும் நன்றியும் யாவரும் வெளியீடு நவின் ஆர் குமார் 21/12/2023

சில கவிதைகள்

1) விடைபெறுகிறேன் மொத்தமாக பிரபஞ்ச அலை வரிசைகளில் இருந்து விடை பெற முடிவு செய்தேன் கைகள் அறுத்து இரத்த வெள்ளத்தில் மிதக்கும் உடலை பார்த்துக் கொண்டே இருக்கிறேன் கடைசி உயிர் நாடி வரை ரசிக்க முடிவு செய்து இம்முடிவை நோக்கி நகர்ந்து கொண்டுருக்கிறேன். முடியும் வரை முயன்று விடைபெற்று  அலைவரிசையின் கடைசி நாடியில் உயிர் பிரிந்ததும் பெளர்ணமி தினத்தில் நட்சத்திரமாய் ஒளிர்வேன். 2) ஈரப்பு திசை இரும்பு துகள்களின் எச்சங்களால்  என் குடும்பம் பூமிக்கு வந்தது போட்டி,  பொறாமை,  நம்பிக்கை,  துரோகம்,  இவ்வனைத்தும் விளையாட்டின் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது யூகங்கள் மாற மாற  தியான புத்தனும் விளித்து கொண்டு  மரணப் பாதைதான்  என் குடும்பத்தின் மூக்த்தி நிலையை தெரிவித்தது ஆலமர கிளை நிழலில் ஆச்சி இறந்ததும் குடும்ப மரம் சிதறி சிதறி துகளானது 3) நிழல் இல்லாத கடல் நிழல் இல்லாமல் நான் கடலுக்கு சென்றதில்லை நேற்று இரவு தான் நிழல் இல்லாமல் சென்று வந்தேன் கடல் எனக்கு சற்று நிதானமாக அலைகள் மூலம் ஆறுதல் கூறியது நான் அலைகளுக்கு கைகளால் வருடி நன்றி கூ...

சில கவிதைகள்.....

1) மிருகம் மனவெளி பறவையாய் என்னை சபித்து கொண்டேன் பெளர்ணமி இரவு வெளிச்சத்தில் ஆற்றின் நடுவில் குதித்து குளிக்க ஆசைபட்டேன் அசட்டுதனங்களால் என்னை உருவகித்தேன் புன்னகையின் வைரமாய் என்னை ஆட்கொண்டேன் பூமி எங்கும் மனவெளி பறவையாய் பறக்க முயன்று முயன்று கடைசியில் தோற்றுபோய் நாக்கின் வெக்கைக்கு நடுவே நின்று  மீண்டும் தோற்கிறேன் 2) ஆகசோதி மரணித்த பொழுதுகளில்  வாழ்வின்பிரகாசம் பெரு வெளிச்சமாக தெரியும் நம்மை சுற்றி நாலுபேர் குளிர்காய்வார்கள் நாமும் படுத்திருப்போம் நான்குஅடி சாஸ்திர பெட்டிக்குள் 3) வளர்ச்சி பூமி  பரிணாம வளர்ச்சியில் இருந்தபோது என் வாலில் கட்டி  பால்வெளி எங்கும் வலம்வந்தேன் பாரம் தாங்காமல் பூமி வாலில் இருந்து உருண்டு உருண்டு பந்தானது        −ஆர்.நவின் குமார்          10/10/2021