காலை தூங்கி எழுந்ததும்
என்னை நானே குளியல் அறை கண்ணாடியில்
பார்த்துக் கொள்வேன்
"காலையிலே யார் முகத்தில் பார்த்தேனோ!
இப்படி எல்லாம் நடக்குது"
என்ற அசட்டை போக்க
என்னை நானே பார்த்து கொள்வேன்.
இடையில் நாயர் கடை சாயாவும் உப்பு பிஸ்கேட்டும் போதும்
பொழுதை தொடங்க.
திட்ட யாரும் இருக்க போவதில்லை
என்னை நானே திட்டுக்கொண்டு பொழுதைக் கழிப்பேன்
சில காதல் பாடல்கள்
சில தோழிகளின் உரையாடல்கள்
சில கிசுகிசுப்புகள்
பல மனிதர்கள்
கொஞ்சம் பிரமையை விட்டு விலகி
நான் நானாக இருக்க ஆசைப்பட்டு
பொழுதை கடப்பேகிறேன்
கொஞ்சம் அஸ்வாசம்
கொடு
நிழலே.....
-ஆர். நவின் குமார்
14-03-2022
Comments
Post a Comment