Skip to main content

Posts

Showing posts from 2022

வாழ்வு என்னும் அற்புதம்

வாழ்வு என்னும் அற்புதம் போர்க்களமாய் இருக்கும் இவ்வுலகில் தான் அதிசயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன பூ பூக்கிறது மழை பெய்கிறது குழந்தை பிறக்கிறது காதல் பிரிகிறது திருமணம் நடக்கிறது வாழ்வு முடிகிறது எல்லாம் முடித்த பின்னும் அசையா பொழுதுகளில்  பறவை வந்து என்னை கடந்த பாதையை நோக்கிச்  அழைத்துச் சென்று கூறியது  "காற்றுக்கு நிதானம் அவசியம் தான் இருந்தும் அதன் போக்கில் அடித்துச் செல்கிறது; அப்படித்தான் வாழ்வும்!"  ஆர். நவின் குமார் 13/6/2022

பழைய கவிதைகள் -1

யாவரும் இணைய இதழ்  - அக்டோபர் 2020  வெளிவந்தவை 01 ஆழக்கடலின் ஆக்ரோச அலை வந்தும் சென்றுவிடவில்லை. கரையைச் சற்று முத்தமிட்டு மெல்ல பின்வாங்குகிறது, சூன்யம் வந்து இருளை கவ்வுகிறது கடலைவிட்டு கடல் நகர்ந்து செல்வது இனிதே. *** 02 நிசப்தம் அணைத்துக் கொண்ட பிறகு தான் சூன்யம் இருளை ஆக்கிரமிக்கிறது. *** 03 வீட்டின் நடுவில் ஊசல் ஆடுகிறது ஆச்சியின் உயிர் உயிரின் ஊசல் இறப்பின் அறிகுறிச்செய்தி ஊசலுக்குப் பிறகு தான் ஆன்மா பிரிவுக்கு காற்றிடம் பேசிய பிறகு தான் மண்ணை முத்தமிடுகிறது உதிர்ந்த சருகு. *** படிக்க  நவீன் கவிதைகள்

நிழலின் அஸ்வாசம்

காலை தூங்கி எழுந்ததும் என்னை நானே குளியல் அறை கண்ணாடியில் பார்த்துக் கொள்வேன் "காலையிலே யார் முகத்தில் பார்த்தேனோ! இப்படி எல்லாம் நடக்குது" என்ற அசட்டை போக்க என்னை நானே பார்த்து கொள்வேன். இடையில் நாயர் கடை சாயாவும் உப்பு பிஸ்கேட்டும் போதும் பொழுதை தொடங்க. திட்ட யாரும் இருக்க போவதில்லை என்னை நானே திட்டுக்கொண்டு பொழுதைக் கழிப்பேன் சில காதல் பாடல்கள் சில தோழிகளின் உரையாடல்கள் சில கிசுகிசுப்புகள் பல மனிதர்கள் கொஞ்சம் பிரமையை விட்டு விலகி நான் நானாக இருக்க ஆசைப்பட்டு பொழுதை கடப்பேகிறேன் கொஞ்சம் அஸ்வாசம் கொடு  நிழலே..... -ஆர். நவின் குமார் 14-03-2022

மறத்தல்

மறத்தல் மது குடித்தால் மனம் பொறுத்துகொள்ளும்  என எண்ணி டாஸ்மாக் சென்று மது அருந்தினேன் மெருகு ஏறிய மனம் எண்ணத்தில்   ஒரு மாய பறவையை வரைந்து துரோங்களை இறக்கையிலும் தன்னுடலில் என்னை பொருத்தி கொண்டு நிழலை விட்டு  பறந்தது ஆர்.நவின் குமார் 11-03-2022