Skip to main content

Posts

Showing posts from August, 2024

சில கவிதைகள்

1)தனிமை எங்கும் இல்லாத தனிமையை தேடுகிறது ஆன்மா  நிறைவேறாத ஏக்கத்தின் பரிதவிப்பில்  விளையாட்டாக  தனிமையை  நாடிச் சென்றது ஆன்மா 2) ஏக்க மலர் அப்பாவிடம் சொல்லி வாங்க முடியும் என்ற நம்பிகையில் மாத கடைசியில் சைக்கிள் கேட்ட பிள்ளை எப்போது வரும் என்ற ஏக்கதில் இரவில் ஏக்கம் மொட்டாகவும்  பகலில் மலராவும்  வாடாமல் இருக்கிறது. நவின் ஆர் குமார் 19/08/2024

சில கவிதைகள்

1) விடைபெறுகிறேன் மொத்தமாக பிரபஞ்ச அலை வரிசைகளில் இருந்து விடை பெற முடிவு செய்தேன் கைகள் அறுத்து இரத்த வெள்ளத்தில் மிதக்கும் உடலை பார்த்துக் கொண்டே இருக்கிறேன் கடைசி உயிர் நாடி வரை ரசிக்க முடிவு செய்து இம்முடிவை நோக்கி நகர்ந்து கொண்டுருக்கிறேன். முடியும் வரை முயன்று விடைபெற்று  அலைவரிசையின் கடைசி நாடியில் உயிர் பிரிந்ததும் பெளர்ணமி தினத்தில் நட்சத்திரமாய் ஒளிர்வேன். 2) ஈரப்பு திசை இரும்பு துகள்களின் எச்சங்களால்  என் குடும்பம் பூமிக்கு வந்தது போட்டி,  பொறாமை,  நம்பிக்கை,  துரோகம்,  இவ்வனைத்தும் விளையாட்டின் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது யூகங்கள் மாற மாற  தியான புத்தனும் விளித்து கொண்டு  மரணப் பாதைதான்  என் குடும்பத்தின் மூக்த்தி நிலையை தெரிவித்தது ஆலமர கிளை நிழலில் ஆச்சி இறந்ததும் குடும்ப மரம் சிதறி சிதறி துகளானது 3) நிழல் இல்லாத கடல் நிழல் இல்லாமல் நான் கடலுக்கு சென்றதில்லை நேற்று இரவு தான் நிழல் இல்லாமல் சென்று வந்தேன் கடல் எனக்கு சற்று நிதானமாக அலைகள் மூலம் ஆறுதல் கூறியது நான் அலைகளுக்கு கைகளால் வருடி நன்றி கூ...