Skip to main content

Posts

Showing posts from 2023

கிருமி கதைகள் வாசிப்பு அனுபவம்

கிருமி கதைகள் மொழிபெயர்ப்பு : நரேன் கொரோனா பெரும் தொற்று நமக்கு பல பாடங்களை கற்றுத்தந்தது தனிமனித இடைவெளி தொடங்கி சுய  ஒழுக்கம் வரை. மொத்தம் பத்து கதைகள் இந்த புத்தகத்தில்   ஒவ்வொரு கதையும் நம்முள் பல கேள்விகளையும் பதில்களையும் விட்டு செல்கின்றன பெருந்தொற்று, நோய்தொற்று காலங்களையுடன் சேர்த்து அறிவியில் புனைவுகளுடன் கலத்த யதர்த்தம், த்ரில்லர்களையும் இக்கதைகள் கூறுகின்றன. நோய் மீதான மனிதனின் பயமும் அதனால் தன்னை தற்காத்துகொள்ள மேற்கொள்ளும் செயல்கள் அகத்தாலும் புறத்தாலும் அவன் கண்டடையும் சித்திரங்களை இந்த கதைகள் கூறுகின்றன. மேலும் சில கதைகள் நோய் தொற்று கலந்த   அரசியல் நுண்ணறிவையும் கூறுகின்றன. எழுத்தாளர் நரேனின் மொழிபெயர்பு வாசிக்க தடையின்றி உள்ளது. பல அறிவியல் புனைவு எழுத்தாளர்களையும் ,ஆங்கில த்ரில்லர் எழுத்தாளர்களை தமிழில் அறிமுகம் செய்துள்ளார் மொழிபெயர்பாளர் நரேனுக்கு வாழ்த்துகளும் நன்றியும் யாவரும் வெளியீடு நவின் ஆர் குமார் 21/12/2023